Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வட மாகாண ஆளுநரைச் சந்தித்த வடக்கு தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள்

ஆகஸ்ட் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை கையளித்தனர்.

அவர்கள் கையளித்த மனுவில்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நிர்வாக அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆளுநர் கவனமாகக் கேட்டறிந்து , விடயம் தொடர்பில் உண்மைத்தன்மையை நிலைநாட்டும் வகையில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், அரச சேவையில் பணியாற்றும் எந்தவொரு தரப்பினரின் கௌரவமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி மன்னாரில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்
அடுத்த செய்தி கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

செப்டம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்கனடா

சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

ஜூன் 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் முன்னெடுப்பு !

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்கனடா

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 10 புதிய அணு உலைகள் கட்டமைப்பு

ஜூன் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?