முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனவிரட்ன தலைமையில் நேற்றைய தினம்(13) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.ஜெயக்காந் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்கள் புனரமைப்பு, கால்வாய்கள் திருத்த வேலை, அணைக்கட்டு வேலைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் விவசாய விரிவாக்கத்திற்கு காணிகளின் தேவை, வனவளத் திணைக்களம், வன ஜுவராசிகள் திணைக்களம் முதலானவற்றால் எல்லைப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், பொறியியலாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

