Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வடக்கு வினாசிகுளம் பாலத்தை நிர்மானிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ரவிகரன் எம்.பியிடம் பொதுமக்கள் கோரிக்கை

ஜூலை 30, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, மாமடு கிராம அலுவலர் பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலத்தையும் நிர்மாணிக்குமாறு அப்பகுதிமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அண்மையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

இதன்போதே மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாண்டான்குளம் வீதி சீரின்றிக் காணப்படுவதாலும், அவ்வீதியோடு இணைந்துள்ள வினாசிகுளம் பாலம் இதுவரை அமைக்கப்படாமல் காணப்படுவதால் வினாசிகுளம் கிராமமக்கள் பாரிய போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

அந்தவகையில் குறித்த சாண்டான்குளம் வீதியும், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலமும் சீரின்றிக்காணப்படுவதால் வினாசிகுளம் கிராமத்தில் வசிக்கின்ற 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வைத்தியசாலை, பாடசாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைளை பெறுவதற்கு பாரிய போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் இதன்போது முறையிடப்பட்டது.

அத்தோடு மழைக்காலங்களில் குறித்த சாண்டான்குளம் வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்படும் நிலையும் காணப்படுவதாகவும் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் சேனைப்புலவு கிராமத்தினூடாக 4கிலோமீற்றர் தூரம் சுற்றி, பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிவருவதாகவும் வினாசிகுளம் கிராமமக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அதேவேளை குறித்த வினாசிகும் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பெரியகுளம், மாமடு, பழம்பாசி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறிப்பாக விவசாயத்திற்குரிய உள்ளீடுகளைக் கொண்டுவருவதிலும், அறுவடைகளை எடுத்துச் செல்வதிலும் பாரிய போக்குவரத்து நெருக்கடிகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலை குறித்த வினாசிகுளம் பாலத்தை அமைக்குமாறு கிராமமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்தகாலத்தில் அப் பாலத்தினை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும், நாட்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றினைக் காரணங்காட்டி குறித்தபாலத்தின் நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.

எனவே குறித்த சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்புச்செய்வதுடன், வினாசிகுளம் பாலத்தினையும் நிர்மாணிப்பதற்கு உரியீநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இதன்போது அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், மக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த வீதியைச் சீரமைப்பதுதொடர்பிலும், வினாசிகுளம் பாலத்தினை நிர்மானிப்பது தொடர்பிலும் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது இந்த களவிஜயத்தில் வவுனியாவடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான செ.சுசீலன், த.தனுசன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியாவடக்கு பிரதேசக்கிளைச் செயலாளர் அமலன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37 வது நாளாக தொடரும் போராட்டம்
அடுத்த செய்தி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய இடங்கள்

ஏப்ரல் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்!

அக்டோபர் 17, 2025
இலங்கை

புன்னைச்சோலை கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

டிசம்பர் 15, 2025
இலங்கை

புளியம்பொக்கணை சந்தி பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஆகஸ்ட் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?