மட்டக்களப்பு புன்னைச்சோலை கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு நிவாரணம் வழங்குமாறு கோரி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பில் அனர்த்தினால் பாதிக்கப்பட்ட புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை இன்று முற்றுகையிட்டதையடுத்து குறித்த கோரிக்கை தொடர்பாக விசாரணை செய்து பாதிப்பு தொடர்பாக உண்மை தன்மை அறிந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வழங்கிய உறுதிமொழி அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்ததினால் புன்னைச்சோலை கிராமத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் பணம் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் சம்பவ தினமான இன்று காலை 10 மணிக்கு புன்னைச்சோலை பகுதியில் ஒன்று திரண்டனர்.
இதனை அங்கு சென்ற தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கரந்துரையாடிதுடன் கிராம உத்தியோகத்தர் தொடர்பான தீர விசாரணை செய்வதுடன் நிவாரணம் தொடர்பாக உண்மை தன்மையை கண்டறிந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்த வாக்கு உறுதி ஒன்றை நா.உறுப்பினர் வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


