Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள  சர்வதேச மாணவர்கள்

ஜூலை 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் சர்வதேச மாணவர்கள் தங்களின் எதிர்காலம் மற்றும் குடிவரவு அந்தஸ்து (Immigration Status) ஆபத்தில் சிக்கியுள்ளதாகக் கூறி, வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கியூபெக் மாகாணத்தில், நான்கு தனியார் கல்லூரிகளின் செயற்பாட்டு அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க மறுத்த மாகாண அரசு ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்தே, அங்கு கல்வி பயின்று வந்த நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மொன்றியலில் அமைந்துள்ள ‘கொலேஜ் சுபேரியர் டி மொன்றியல்’ (Collège supérieur de Montréal) கல்லூரிக்கு முன்பாகத் திரண்ட மாணவர்கள், பேரணியாகச் சென்று கியூபெக் மாகாணக் குடிவரவு அமைச்சகத்தின் (Quebec Immigration Ministry) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்ட நான்கு தனியார் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களை உடனடியாக வேறு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து, தங்களது கல்வியை முழுமையாக்க கியூபெக் அரசு வழிவகை செய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.

கியூபெக்கில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதிப்பத்திரமும் (Study Permit) கியூபெக் ஏற்புச் சான்றிதழும் (CAQ) அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஆவணங்கள் ஆகும்.

தற்போது கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ அனுமதிக் காலம் முடிவடையும் நிலையில் உள்ள சர்வதேச மாணவர்களால், அதனைப் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி வெஸ்ட்மவுண்ட் நகரசபை மேயர் மீது பதிவான எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள்
அடுத்த செய்தி பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் இருந்த குடிநீர் தாங்கியை அகற்றிய பொலிஸார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் தேர்தல் களம் – கருத்துக்கணிப்பில் ‘பார்டி கியூபெக்வா’ முதலிடம்; மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது ஆளும் CAQ கட்சி!

ஜூன் 10, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

புதிய தெருச் சோதனை கொள்கையை வெளியிட்டது மொன்றியல் காவல்துறை!

மே 26, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பிரெஞ்சு மொழித் திணிப்புச் சட்டங்களுக்கு மத்தியில், போராடுகிறார் உத்தியோகபூர்வ மொழிகளுக்கான ஆணையர்!

ஜூன் 12, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகரில் இடம்பெற்ற பிரம்மாண்ட வீதி ஊர்வலம்

மார்ச் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?