Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்குத் தெரிவான நிறுவனம் – நேட்டோ  உச்சிமாநாட்டில் அறிவிக்கப்படும்

ஜூலை 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘ரோயல் கனேடிய கடற்படைக்கான’ (Royal Canadian Navy) புதிய நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் போட்டியில், இறுதி இரண்டு சர்வதேச நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

காலாவதியாகும் நிலையில் உள்ள கனேடிய கடற்படையின் தற்போதைய நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக, 12 புதிய நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான இந்த மெகா ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு, அதன் வாழ்நாள் பராமரிப்புச் செலவுகளையும் சேர்த்து $100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கனடாவின் கடற்படையை நவீனமயமாக்கும் இந்த ஒப்பந்தத்துக்கான போட்டியில் ஜெர்மனியின் ‘திசென்க்ரூப் மரைன் சிஸ்டம்ஸ்’ (ThyssenKrupp Marine Systems – TKMS) மற்றும் தென்கொரியாவின் ‘ஹன்வா ஓஷன்’ (Hanwha Ocean) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இறுதிப் பட்டியலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

துருக்கியின் அங்காரா நகரில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) தலைவர்கள் உச்சிமாநாட்டிற்குப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) புறப்படுவதற்கு முன்பாக, ஹாலிஃபாக்ஸ் நகரில் வைத்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட நிறுவனம் எது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.

மத்திய அரசிடம் தற்போதுள்ள நான்கு விக்டோரியா-கிளாஸ் (Victoria-Class) நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒரேயொரு கப்பல் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளது.எஞ்சிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தீவிரப் பராமரிப்பில் இருக்கின்றன.

இந்த நிலையில் நாட்டின் முப்பக்கக் கடற்கரைகளையும் பாதுகாக்க இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை அதிவிரைவாகப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ரிவியர் – டெஸ் – பிரெய்ரிஸ் குடியிருப்பில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
அடுத்த செய்தி கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான முரண்பாட்டை விவரித்த தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ஜப்பானை நோக்கி படையெடுக்கும் கனேடியர்கள்!

ஆகஸ்ட் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

புதிய யோசனைக்கு ஆதரவு வழங்கியது கனடா எரிவாயுத்துறை

ஜூலை 10, 2025
கனடாமுதன்மை செய்தி

ரிச்மண்ட் ஹில் நகர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி எலெனோர் ஸ்டர்கோ…

மே 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?