Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஜூலை 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
மன்னார் மடு   திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர்  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்   மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார்  ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.

குறித்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதி நிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம்   கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியவில்  மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் திருச்செபமாலைகள் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் இடம் பெற்றது. மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழாவுக்கான வேஸ்பர் ஆராதனை நேற்று(1)  புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
 தொடர்ந்து  இன்று வியாழக்கிழமை (2) காலை 6:15 மணிக்கு  திருவிழா திருப்பலி ஆயர் தலைமையில் கூட்டு திருப்பலியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!
அடுத்த செய்தி முன்னாள் தவிசாளர் உதயகுமார் உட்பட 6 பேர் படுகொலை வழக்கு: இனியபாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி…

மார்ச் 8, 2025
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

இலங்கை காவல்துறை ஆரம்பிக்கவுள்ள புதிய விசாரணைப் பிரிவு!

ஆகஸ்ட் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அவசர தொலைபேசி எண் 119 இலக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை!

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?