Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

ஜூன் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கில்ஆண்டிறுதியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதால், அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாண விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நன்னீர் மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் துறைசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கிய ஆளுநர், ‘இந்த ஆண்டிறுதியில் கனமழை எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, மழைகாலத்துக்கு முன்னதாகவே திட்டங்களை நடைமுறைப்படுத்தி முடிப்பதற்கு அனைத்துத் திணைக்களங்களும் உறுதியான நிலைப்பாட்டைக் காண்பிக்க வேண்டும்,’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைத் துரிதப்படுத்துவதற்கான பொருத்தமான அறிவுறுத்தல்களும் ஆளுநரால் வழங்கப்பட்டன.

பின்னர், விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நன்னீர் மீன்பிடிப் பிரிவு, நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்றிட்ட முன்னேற்றங்கள் தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டன.

இதன்போது, அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் களத்தில் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் ஆளணிப் பற்றாக்குறைகள் தொடர்பில் அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்விடயங்களை விரிவாக ஆராய்ந்த ஆளுநர், அச்சிக்கல்களைத் தீர்த்து வேலைத்திட்டங்களைச் சீராக முன்னெடுப்பதற்கான உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.

இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் மாகாணப் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்
அடுத்த செய்தி இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது – வவுனியாவில் கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி Leptospirosis பக்றிரீயா என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது

பிப்ரவரி 2, 2026
இலங்கை

தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு!

டிசம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

எந்த உணவை எந்த உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது ….

ஏப்ரல் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?