இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் இன்று காலை நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய புவி இயற்பியல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி 6.7 ரிக்டர் அளவில் இவ்வதிர்வு பதிவாகியுள்ளதுடன், பாலு நகருக்கு தென்கிழக்கே சுமார் 42 கிலோமீற்றர் தொலைவில், 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்வினால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுடன் சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


