Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை

ஜூன் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வட மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வானது கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (15-06) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றிருந்தது.

வட மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள மாணவ, மாணவிகளுக்காக இதுவரை ‘சிசு செரிய’ பேருந்து சேவைகள் நடைமுறையில் இருக்கவில்லை.

இந்நிலையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து, முதற்கட்டத்தின் கீழ் வட மாகாணத்தினுள் 20 ‘சிசு செரிய’பேருந்துகளை இயக்குவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர்,

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக 200-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை ‘சிசு செரிய’ சேவையில் இணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கென ஒரு பில்லியன் ரூபாவிற்கு அண்மித்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை, இதுவரை வட பகுதி பாடசாலை மாணவர்களுக்குக் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை எனவும், இதற்கு முன்னர் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் ஊடாகவே பொதுப் போக்குவரத்துச் சேவையுடன் இணைந்து மாணவர்களின் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இச் ‘சிசு செரிய’ பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இதன்போது மாணவர்களுக்கான போக்குவரத்துப் கட்டணத்தில் பாதி (அரைக்கட்டணம்) மாத்திரமே அறவிடப்படும் என்பதுடன், எஞ்சிய தொகையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் எஸ். விமலேஸ்வரன் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

முந்தைய செய்தி பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அடுத்த செய்தி நெடுந்தீவுக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்த வடதாரகை படகு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மாங்குளத்தில் வாகன விபத்து

பிப்ரவரி 1, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

குளிரூட்டபட்ட நீரை அதிகம் குடிப்பவர்களா நீங்கள்?நிச்சயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

60 ஆண்டுகளின் பின்னர் நவீன மயமாகும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்!

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உணவு ஒவ்வாமை காரணமாக 21 மாணவர்கள் வைத்திய சாலையில் அனுமதி!

மே 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?