நாட்டில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை, பொத்துவில் வரையிலும் காற்றின் வேகமானது 50 – 60 கிலோமீற்றர் வரை காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.


