கடந்த 1998ஆம் ஆண்டு இதே நாளில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமான தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொது மக்களுடைய 28 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று10.06.2026 உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் நிரோஜன் விளையாட்டுக்கழக மைதானத்தில் தலைவர் சஜந்தன் தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்ற விசேட நினைவிடத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை குறித்த தாக்குதலில் தனது சகோதரியினை இழந்த பெண் ஒருவர் ஏற்றிவைத்தார் அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் த பொது உருவப் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் ஜீவராசா குறித்த தாக்குதலில் தங்களுடைய உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.


