சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதினை எதிர்த்து “குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்னும் தொனிப்பொருளில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துக் கொண்டனர்.
