நாட்டில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பில் லிட்ரோ நிறுவனம் ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது.
இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் கொண்டு வரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 4765 ரூபாவிற்கும், 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1910 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 890 ரூபாய் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
