Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

அபிரிபி-தெமிசுகாமிங்(Abitibi- Témiscamingue) போரியல் காடுகளில், முன்னெடுக்கப்படவுள்ள தங்கச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக பழங்குடியின மக்கள் போராட்டம்

ஜூன் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள அபிரிபி-தெமிசுகாமிங் (Abitibi- Témiscamingue) பிராந்தியத்தின் போரியல் காடுகளில், முன்னெடுக்கப்படவுள்ள தங்கச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக, அங்குள்ள அனிஷ்னாபே (Anishinaabe) பழங்குடியின மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முறையான கலந்தாலோசனைகள் இன்றி தங்களின் பூர்வீக நிலத்தில் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கியூபெக்கின் லக்-சைமன் (Lac-Simon) அனிஷ்னாபே பழங்குடியின சமூகத்தின் பூர்வீக நிலப்பரப்பிலிருந்து வெறும் 8 கிலோமீட்டர் தொலைவில், பல படுகுழிகளைக் கொண்ட (Multi-pit) பிரம்மாண்ட திறந்தவெளித் தங்கச் சுரங்கத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மெக்சிகோவைச் சேர்ந்த சுரங்கத்துறை மாபெரும் நிறுவனமான பிரெஸ்னிலோ (Fresnillo), இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகளை (Exploratory work) உடனடியாக நிறுத்திவிட்டு, தங்கள் நிலத்தை விட்டு வெளியேறுமாறு பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்தப் பழங்குடியின மக்கள் குறித்த சுரங்கப் பகுதிக்கு நேரடியாகச் சென்று உத்தியோகபூர்வ அறிவித்தல் (Cease Operations Notice) ஒன்றையும் வழங்கியுள்ளனர்.

மேலும் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பழங்குடியினத் தலைவர் லூசியன் வபனோனிக் (Lucien Wabanonik) தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள், அங்கு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி பிளையிங் வேல்ஸ் நிறுவனத்திற்கான அடுத்தகட்ட நிதியுதவிகளை அதிரடியாக நிறுத்தியது கியூபெக் மாகாண அரசு.
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குளவி கொட்டுக்கு இலக்கான 10 மாணவர்கள்

மார்ச் 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மூர்வீதியிலுள்ள காணிகளினால் சுற்றுப்புற மக்கள் பாதிப்பு

அக்டோபர் 4, 2025
அண்மைய செய்திகள்கனடா

மத்திய கிழக்கில் சிக்கியுள்ள கனடியர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

மார்ச் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?