Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஏறாவூரில் சகோதரியை கொலை செய்த 14 வயது சகாதரன் கைது

மே 30, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை இன்று சனிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை (28) மாலையில் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமி குளியலறை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளதுடன், தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியில் சென்றுள்ள நிலையில் 14 வயது சகோதரனும் 11 வயது சகோதரியும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தருமாறு டிக் டாக் பார்க்க வேண்டும் என சகோதரன் கேட்டுக் கொண்டார். அதற்கு சகோதரி கையடக்க தொலைபேசியை கொடுக்க மறுத்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் சகோதரியை அவரின் கழுத்தை நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சகோதரியை இழுத்து சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாது போல வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதே நேரம் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தை வீட்டில் பிள்ளைகளை காணவில்லை என தேடிய போது குளியலறை தண்ணீர் தொட்டியில் 11 வயது மகள் வீழ்ந்து மயங்கி கிடப்பதை கண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார். இதன் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் 14 வயது சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் மேற்கொண்ட சிறுவன் சகோதரியை கொலை செய்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனை தொடர்ந்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாகவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – ஊடகவியலாளரிடம் தீவிர விசாரணை
அடுத்த செய்தி தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த இளைஞர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொத்மலை பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

மே 14, 2025
இலங்கை

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்-துரைராசா ரவிகரன்!

செப்டம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணாமற்போன வாகனங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பம் ….

மார்ச் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரயிலின் இயத்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு!

செப்டம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?