Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – ஊடகவியலாளரிடம் தீவிர விசாரணை

மே 30, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் முல்லைத்தீவு பொலிஸார் நேற்றையதினம் (29.05.2026) மீண்டும் ஒரு மணிநேர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த 27 ஆம் திகதி அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

எனினும், அன்றையதினம் முறைப்பாட்டாளரான தவிசாளர் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மீண்டும் நேற்றையதினம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த விசாரணைகள் முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்றதுடன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரும் அதில் பிரசன்னமாகியிருந்தார்.

இதன்போது, “குறித்த குரல் பதிவு எவ்வாறு உங்களுக்குக் கிடைத்தது?” , செய்தியால் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும், இனிமேல் இவ்வாறான செய்திகளை போட வேண்டாம் என்றும் , போடப்பட்ட செய்தியை இல்லாது செய்யுமாறும் பொலிஸாரிடம் தவிசாளர் கூறியிருந்தார். இவ்வாறு செய்திகள் இனி வெளிவருமாக இருந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என பொலிஸார் இதன்போது தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஊடகவியலாளர் இது தனிநபர்கள் சார்ந்த உரையாடல் அல்ல. பிரதேச சபையின் முன்னாள் செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான உரையாடல். மேலும் குறித்த தவிசாளரே இந்த உரையாடலை வட்சப் குழுவொன்றிலும் பகிர்ந்திருந்தார் என தெரிவித்தார்.

இவ்வாறான விவகாரங்களை பொலிஸார் நேரடியாக நீதிமன்றில் முற்படுத்த முடியாது. எனவே, தேவையெனில் சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யுமாறு தவிசாளருக்கு அறிவுறுத்தியதையடுத்து விசாரணைகள் நிறைவுக்கு வந்தன.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தவிசாளரும், சபை உறுப்பினர் ஒருவரும் இடையே இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பொதுமக்களுக்கு உண்மைத்தன்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறான விசாரணைகள் மற்றும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவது, ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என ஊடக வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி சிவாஜிலிங்கத்தை நேரில் சென்று பார்வையிட்ட எம்.ஏ .சுமந்திரன்
அடுத்த செய்தி ஏறாவூரில் சகோதரியை கொலை செய்த 14 வயது சகாதரன் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தொன்மையான வரலாற்று சின்னம் நல்லூர் அழிவதை பார்க்க முடியாது – சி.வீ.கே.சிவஞானம்

ஏப்ரல் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஹிருணிக்கா

ஜூன் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாணவர்கள் மாவட்ட ரீதியில் முதலிடம் – ஆளுநர் பாராட்டு!

ஏப்ரல் 1, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். காணாமல் போன கடற்தொழிலாளர்களை மீட்டு கரை சேர்த்த சக தொழிலாளர்கள்

ஏப்ரல் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?