ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் தப்பியோடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது சந்தேகநபருக்கு ஏட்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சந்தேகநபரிடம் மேட்கொண்ட விசாரணையில் தெரிய வருவதாவது, மனைவியின் தூண்டுதலினால் இந்த கொலையை செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் தன்னை தவறு செய்ய தூண்டிய மனைவியை கொலை செய்யவுள்ளதாக குற்ற புலனாய்வு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சந்தேகநபரின் மனைவியின் பாதுகாப்பை உறுதி செய்வதட்காக அவரை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
