நாட்டில் இந்தாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதன்படி இவ்வாண்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 32,071 ஆக பதிவாகியுள்ளது.
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 8,9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டமானது கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் கல்முனை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
