உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டுத் துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேசிய மக்கள் சக்தியியினர் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் ஆகியோர் நேரில் சென்று சுகம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , சிகிச்சைக்காக சுமார் 80 இலட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும் ,அதற்கு உதவ வேண்டும் என சிவாஜிலிங்கம் பகிரங்கமாக கோரி இருந்தார். அதனை அடுத்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பெருமளவானோர் நிதியுதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
