மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் , செல்வேரி பகுதியில் உள்ள பனங்காட்டில் நேற்று வியாழக்கிழமை (21) மாலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது.
இதன்படி மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன் போது பொலிஸ், இராணுவம் மற்றும் கடற் படையினரின் தீவிர முயற்சியால் நீண்ட நேரத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதுடன் குறித்த தீயினால் சில பனை மரங்கள் எரிந்துள்ளது.
தீ பரவியதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் மேலதிக நடவடிக்கைகளை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
