நாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிபீடம் ஏறிய வேளையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
குறித்த விடயத்தை பிள்ளையானின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபகஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைக்கு சென்றதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவிதுள்ளார்.
மேலும் இந்த விடயங்கள் தொடர்பிலான ஆவணங்கள் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
