Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். மழைநீரை சேமிக்கும் புதிய திட்டங்களை உருவாக்குங்கள்

மே 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நெடுந்தீவில் உள்ள கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக மக்களின் முழுமையான தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை. எனவே அங்கு புதிதாக மற்றுமொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே ஆளுநர் , அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதிநிதிகளிடம் ஆளுநர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நெடுந்தீவுக்கு வேறெந்த வகையிலும் குடிநீர் விநியோகத்தை வழங்க முடியாத நிலையில், கடல்நீரைச் சுத்திகரித்து நன்னீராக்கி வழங்கும் செயற்பாடே ஒரே தீர்வாக உள்ளது.

அத்துடன் அங்கு ஏற்கனவே இயங்கி வரும் கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு (Reverse Osmosis Plant) நிலையத்தின் ஊடாக மக்களின் முழுமையான தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை.

அங்கு புதிதாக மற்றுமொரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும். இவ்வாறான புதிய திட்டங்களுக்கு, தற்போதைய செயற்றிட்டங்களில் எஞ்சியுள்ள சேமிப்பு நிதியினைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியினர் பரிசீலிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

அதற்கு, தற்போதைய குடாநாட்டு குடிநீர் விநியோகத் திட்டத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதற்கான செலவீனம் மிக அதிகம் எனவே, யாழ்ப்பாணத்தில் மழைநீர் நேரடியாகக் கடலுக்குச் சென்று கலப்பதைத் தடுத்து, அதனைச் சேமித்துப் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மாற்று நடவடிக்கைகள் மற்றும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாநகருக்கான கழிவுநீர் முகாமைத்துவ வலையமைப்புத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவவுள்ளமை தொடர்பிலும் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், இந்த பாரிய திட்டத்துக்கான கேள்விகோரல் நடவடிக்கைகள் இந்த ஆண்டுக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

முந்தைய செய்தி பால் தேநீரின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு
அடுத்த செய்தி சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்த முன்னாள் ஜனாதிபதிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இந்திய மீனவர்களே இலங்கை எல்லை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள் – நூர் மொஹமட் ஆலம்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் மாமனாரை தாக்கிய மருமகன்!(Video)

நவம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவர்களுக்கு காலநிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஜூன் 15, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கினை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசுடன் 1,000 கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜூன் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?