Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வலி. வடக்கில் இராணுவத்தின் சொகுசு பங்களாவினால் கடற்தொழிலுக்கு தடை

மே 17, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

வலி. வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் பகுதிக்குள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மயிலிட்டியில் உள்ள இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிடத்திற்கு (கொமோண்டோ பங்களா) முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்த வேளை திடீரென மழை பெய்தமையால், மழைக்கு ஒதுங்கி நிற்க பங்களாவின் எல்லை வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பாள் கட்டியுள்ளனர் .

அதனை அடுத்து கொட்டும் மழைக்குள்ளும் அவ்விடத்திற்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தரப்பாளை உடனே கழட்டுமாறும் , இல்லை எனில் இதில் உள்ளவர்களை கைது செய்வேன் என மிரட்டியுள்ளார்.

அதனை அடுத்து அங்குள்ளவர்கள் அதனை காணொளி எடுக்க முற்பட்ட வேளை அவர்களுடன் தர்க்கம் புரிந்து விட்டு , அவ்விடத்தில் இருந்து திரும்பி சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.

அது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

கீரிமலை – பருத்தித்துறை வீதியில் கடற்கரை பக்கமாக உள்ள காணிகள் உயர் பாதுகாப்பு வலயமாகவோ , இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியாகவோ காணப்படவில்லை. ஆனாலும் அந்த காணிகளை மக்களிடம் இராணுவத்தினர் கையளிக்கவில்லை.

குறித்த பகுதியிலையே இராணுவ தளபதிகளுக்கான சொகுசு தங்குமிடமும் , பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு என சுமார் ஒரு கிலோ மீற்றர் நீள கடற்கரை பகுதியை தம் வசம் வைத்துள்ளனர்.

அத்துடன் பலாலி பகுதியில் , சந்தை கட்டட தொகுதி பொது மக்கள் பாவனைக்காக விடப்பட்டு இருந்தாலும் , அப்பகுதியில் இராணுவத்தினரின் வீதியோர உணவகங்களே காணப்படுகிறது,. அப்பகுதியில் தனியார் வியாபாரம் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது.

அதேபோன்றே குறித்த கடற்கரை பகுதியில் இருந்து முன்னர் மீன் பிடி நடவடிக்கைக்கு சென்றவர்கள், தற்போது அப்பகுதியில் மீன் பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.

குறித்த பகுதியில் உள்ள காணிகளை இன்னமும் மக்களிடம் மீள கையளிக்காது, இராணுவத்தினர் தமது பயன்பாட்டிற்காக வைத்துள்ளார்கள்.

பாதுகாப்பு காரணங்கள் இன்றி ,தமது உல்லாச வாழ்வுக்காக தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து வாழும் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி எமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும். எமது வாழ்வாதாரங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அதேவேளை , கீரிமலை – பருத்தித்துறை வீதியில் கடற்கரை பக்கமான காணிகளை ஓரிரு மாதங்களில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக , கடந்த 03ஆம் திகதி யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அடுத்த செய்தி தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலை முன்றலில் நான்கு நாள் தொடர் போராட்டம்

பிப்ரவரி 19, 2026
1
இலங்கை

வவுனியா பிரதேசசெயலகத்தின் கலாநேத்ரா விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டள்ளது.

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு….

மே 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் பிணையில் விடுவிப்பு

ஜூன் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?