சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி , தாதிய பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள் , மூத்த தாதியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதன் போது. தாதியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டும் நிகழ்வுகளும், தாதியர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நாடகங்களும் இடம்பெற்றன.
