தமிழக சட்டசபையின் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றி கழகம் முன்னிலை பெற்றுள்ளதுடன் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இல்லாது காணப்பட்டது.
இதன்படி தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைப்பதற்கான ஆதரவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக ஆளுநரை சந்தித்து பேசவுள்ளார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்.
தமிழக வெற்றி கழக உறுப்பினர்கள் 108 பேருடன் காங்ரஸ் உறுப்பினர் ஐவர், இடதுசாரிகள் தலா இரண்டு கட்சிகள் என 116 உறுப்பினர்களுடன் போராடி வந்த நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை வழங்கியுள்ளது.
மேலும் தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


