ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன அவர்களுக்கு ஏற்பட்ட கதியை நோக்கும்போது, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலே அவர்களின் உயிருக்கும் பலத்த அச்சுறுத்தல் காணப்படுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
“கபில சந்திரசேனவுக்கு நேர்ந்ததை பார்க்கும்போது சுரேஷ் சாலேவின் தலைவிதியும் ஆபத்தில் உள்ளது. அவருக்கு பிணை கிடைத்தாலும் கூட, அதன் பிறகு என்ன நடக்கும் என்று கூற முடியாது.


