Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையில் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம்

மே 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் – அமெரிக்கா இடையே போர் தொடங்கி இரண்டு மாதங்களைக் கடந்திருக்கும் நிலையில், கடந்த ஏப். 8 முதல் சுமாா் ஒரு மாதமாக போா்நிறுத்தம் அமுலில் இருக்கிறது.

இருப்பினும், ஈரானின் ஹோா்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை மட்டும் தொடா்ந்து வருகிறது.

இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அணுசக்தி தொடர்பான விரிவான பேச்சுவார்த்தை நடத்தவும் ஈரானுடன் ஒரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெள்ளை மாளிகை இறுதி செய்துள்ளதாக ஆக்ஸியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அடுத்த 48 மணிநேரத்தில் ஈரானிடம் அமெரிக்கா பதிலை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாவது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒரு பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈரான் அணு ஆயுத செறிவூட்டலுக்குத் தற்காலிகத் தடை விதிப்பது, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான நிதியை ஈரானுக்கு விடுவிப்பது, ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகளை விலக்குவது உள்ளிட்ட 14 அம்சங்கள் அடங்கியிருப்பதாக ஆக்ஸியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருக்கும் ஈரானிய மூத்த அதிகாரிகளுக்கு இடையே நேரடியாகவும் மத்தியஸ்தர்கள் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த ஒப்பந்தத்தின்படி, 30 நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையும் படிப்படியாக நீக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

செப்டம்பர் 6, 2026
உலகம்

பிலிப்பைன்ஸில் படகு தீ விபத்து”: தொடரும் மீட்பு பணிகள்

செப்டம்பர் 12, 2026
உலகம்

நார்வே மன்னர் 5-ஆம் ஹரால்ட் மறைவு: 8-ஆம் ஹாக்கோன் புதிய மன்னராகப் பொறுப்பேற்பு

ஆகஸ்ட் 28, 2026
உலகம்

80,000 அரசு பணியிடங்களை இரத்து செய்த அமெரிக்க அரசு!

மார்ச் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?