இந்த ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் I ROAD திட்டம் மூலம் புனரமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட வீதிகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் I ROAD திட்டம் மூலம் பல வீதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நாட்டின் கொவிட் மற்றும் பொருளாதார நிலை காரணமாக தடைப்பட்டிருந்தன.குறித்த வீதிகளில் சில வீதிகள் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீதிகள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களை தெளிவுபடுத்தும் நோக்குடனும் கிராம மட்ட அமைப்புக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்ளும் நோக்குடனும் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் I ROAD பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மட்ட உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ,கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
