Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். பூம்புகார் மாதிரிக் கிராம நிலத்தடி நீர் ஆய்வுக்கு

மே 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நீர் பாதுகாப்பிற்கான WASPAR செயற்றிட்டத்தின் கீழ் செயல்படும் இளம் நீர் வாண்மையாளர் வட்டத்தினர், யாழ் அரியாலை – பூம்புகார் மாதிரிக் கிராமத்தின் நிலத்தடி நீர் வளத்தை ஆய்வு செய்வதற்கான கள ஆய்வொன்றை மேற்கொண்டனர்.

இக் களஆய்வின் போது, பூம்புகாரில் உள்ள நீர் வளம் மற்றும் நீர்ப்பயன்பாடு தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன் நீருடன் தொடர்புடைய சவால்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

மேலும், பூம்புகாரில் உள்ள எழுமாறாக தெரிவு செய்யப்படட சில கிணறுகளில் நீரின் பௌதிக தன்மையானது ஆராயப்பட்டது .

நிலத்தடி நீர் சார்ந்த பிரச்சனைகளை பல வருடங்களாக எதிர் கொள்ளும் மக்கள் பலர் வாழுகின்ற பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆரம்பகட்ட ஆய்வானது அங்குள்ள நீர் மூலங்கள் தொடர்பில் மேலும் விரிவான ஆய்வுகள் செய்வதற்கு அடித்தளமாக அமைகின்றது.

இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் மூலம், கிராம மக்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் செயற்றிட்டக் குழுவினரின் ஒருங்கிணைந்த முயற்சியின் வழியாக பூம்புகார் கிராமத்தில் நிலத்தடி நீரின் பாதுகாப்பான மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த பயன்பாட்டை நீண்டகால நோக்கில் உறுதிசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

பூம்புகார் கிராமம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தின் கீழ் மாதிரிக் கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் ஆரம்ப நிகழ்வில் WASPAR மற்றும் YWP பிரதிநிதிகள் துறைசார் ஆலோசகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இவ்வாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி நோர்வூட் நகரில் திறக்கப்படவுள்ள மதுபானசாலை – போராட்டத்தில் பொதுமக்கள்
அடுத்த செய்தி ROAD திட்டம் மூலம் புனரமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட வீதிகள் தொடர்பாக கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

துறைமுக உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகிய விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு, நாடாளுமன்றக் குழு உத்தரவு

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு!

ஜூன் 28, 2025
இலங்கை

புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழாவின் தேர்ப்பவணி.

பிப்ரவரி 16, 2025
இலங்கை

புதிய மோட்டார் சைக்கிளின் விலை….

பிப்ரவரி 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?