வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் முகமாக காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாகாண அபிவிருத்தி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் ‘Clean North’ திட்டத்தினூடாக காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் முகமாக வீதியோர நடைபாதை அமைக்கும் வேலைத்திட்டம் 1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த வேலைத் திட்டத்தை, வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை அமைப்பாளர் பிரகாஸ், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.
