காலி சிறையில் இருந்து தப்பித்து செல்வதற்காக இரு கைதிகள் முயற்சி செய்துள்ளனர்.
இதன்போது கைதிகளை பிடிப்பதற்காக சிறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடாத்தியதில் ஒரு கைதி காயமடைந்ததுடன், மற்றைய கைதி சிறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைதியின் இடது தோள்பட்டையில் காயமடைந்துள்ளதுடன், குறித்த கைதி மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
