Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை பிரதேச சபையின் பெயரால் அநாமதேய அறிவித்தல்

மே 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காங்கேசன்துறை கடற்கரைக்கு “மீனவர்களை தவிர ஏனையோர் உள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது” என அநாமதேய நபர்களால் பிரதேச சபை மற்றும் மீன் பிடி சங்கம் என அறிவித்தல் துண்டு ஒட்டப்பட்டுள்ளது.

காங்கேசந்துறை – கீரிமலை வீதி, முதலாம் ஒழுங்கை, காங்கேசன்துறை கடற்கரைக்கு செல்கின்றது. அந்த ஒழுங்கையில் சிலர் வசிப்பதுடன் , கடற்கரைக்கு வரும் சிலரும் அந்த ஒழுங்கையினை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அந்த ஒழுங்கைக்குள் பிரதேச சபையினால் வைக்கப்பட்டுள்ள நீர் தாங்கி, மற்றும் மதில்களில் “மீனவர்களை தவிர ஏனையோர் உள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது” என்ற அறிவித்தலில் கீழ் அடைப்புக்குள் காங்கேசன்துறை பிரதேச சபை மற்றும் மீன் பிடி சங்கம் என காணப்படுகிறது.

காங்கேசன்துறைக்கு என தனியான பிரதேச சபை இல்லாத நிலையில் , வலி.வடக்கு பிரதேச சபையின் உப அலுவலகம் ஒன்றே காங்கேசன்துறையில் அமைந்துள்ளமையால் , இந்த அறிவித்தல் பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்றி , தனி நபரால் பிரதேச சபை பெயரினை சட்ட முரணாக பயன்படுத்தி அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்னர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஒழுங்கையில் வசிக்கும் பெண்ணொருவர் , அந்த ஒழுங்கை ஊடாக எவரும் கடற்கரைக்கு செல்ல கூடாது என தடை ஏற்படுத்த முயற்சி செய்ததுடன் , கடற்கரைக்கு வந்தவர்களுடனும் முரண்பட்டுள்ளார்.

அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலக பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த பெண்ணை அழைத்து ஒழுங்கையூடாக கடற்கரைக்கு செல்பவர்களை மறிக்கும் அதிகாரம் உமக்கு இல்லை. மீறினால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் ஈழத் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி இடம்பெற்ற மக்கள் மாநாடு
அடுத்த செய்தி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கனகராயன் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரழப்பு….

மே 26, 2025
இலங்கை

கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் சிற்றூண்டிச்சாலை தொடர்பில் முறைப்பாடு!

ஆகஸ்ட் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்!

ஜூலை 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரி கைது

மே 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?