Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மதுபான சாலைகளில் போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனைக்குத் தடை

ஏப்ரல் 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மன்னார் நகர சபையில் இன்று (28) மதுவரித் திணைக்கள அதிகாரிகள், மன்னார் பொது சுகாதார வைத்தியதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

மன்னார் நகரசபை தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை முறையாக விற்பனை செய்ய முடியாமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் 5 மாதங்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட கள் மதுபான சாலைகளில் விற்பனை செய்வதை நிறுத்தி தருமாறு உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை முன்வைக்கப்பட்டது .

இருந்த போதிலும் குறித்த கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றது.

இருப்பினும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மதுபான விற்பைனையாளர்களின் சம்மந்ததுடன் விற்பனை நேரக்கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி மன்னார் நகர் பகுதியில் உள்ள மதுபான சாலைகளில் (Wine Stores) தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

உள்ளூர் உற்பத்தியாளர்களின் கள் விற்பனையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தற்போது இயங்காமல் இருக்கும் உயிலங்குளம் கள் உற்பத்தி நிலையத்தை (Toddy Bottling Plant) மீண்டும் முழுமையான அளவில் இயங்கச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மதுவரித் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இதன் மூலம் உற்பத்தியாளர்களின் கள்ளினை தரமான முறையில் போத்தல்களில் அடைத்து வெளிமாவட்டங்களுக்கு சந்தைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடை முறைகளை மதுபானசாலை உரிமையாளர்கள் முறையாக பின்பற்றுவதை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பதுடன், உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது

இந்தத் தீர்மானங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தின் தென்னை மற்றும் பனை சார் கள் உற்பத்தியாளர்கள் பெரும் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப் படுவதோடு, உள்ளூர் உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளின் அளவீட்டு பணிகளில் இழுபறி
அடுத்த செய்தி அரசாங்கம் நேர்மையாக செயற்படுவதனால் தான் தூற்றுதலுக்கு இலக்காகிறது – ஆளுநர் நா.வேதநாயகன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

மார்ச் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் சிறிதரன் தீர்மானங்களை எடுக்கின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஜனவரி 19, 2026
இலங்கை

சிங்கள இனவாதிகளிடம் இருந்து தமிழ் தேசியத்தை பாதுக்கா தமிழ் கட்சிகள் ஓரணில் திரளவேண்டும் – இரா. துரைரெட்ணம்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். 20 இலட்ச ரூபாய் ஆம்பரையுடன் ஒருவர் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?