Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கம் நேர்மையாக செயற்படுவதனால் தான் தூற்றுதலுக்கு இலக்காகிறது – ஆளுநர் நா.வேதநாயகன்

ஏப்ரல் 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுவதாலேயே பலரின் தூற்றுதலுக்கு இலக்காக வேண்டியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பொதுச் சேவையின் இணைந்த சேவைப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விசேட நிகழ்வு, வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்,

உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நியமனங்கள் வெறுமனே ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்டவை அல்ல. மாறாக, மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே வழங்கப்படுகின்றன.

அரசாங்க சேவையில் இரு வகையான உத்தியோகத்தர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் தங்களை நாடி வரும் பொதுமக்களை எவ்வாறு தட்டிக்கழித்து அலைக்கழிக்கலாம் என எண்ணுவார்கள்.

மற்றையவர்கள், பொதுமக்களுக்கு எப்படியாவது சேவையைச் செய்து கொடுக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் நினைப்பார்கள். நீங்கள் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், இந்தப் பொறிமுறை முற்றிலும் சுயாதீனமாக இயங்கியமையால்தான் நீங்கள் அனைவரும் இன்று தகுதி அடிப்படையில் நியமனம் பெற்றுள்ளீர்கள். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்த நியமனங்களுக்கான அனுமதிகள் அவ்வளவு இலகுவாக எமக்குக் கிடைத்துவிடவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நேர்மையாகச் செயற்படுவதாலேயே பலரின் தூற்றுதலுக்கு இலக்காக வேண்டியுள்ளது.

எனினும், நேர்மையாகச் செயற்படுவர்களுக்கு அரசாங்கம் எப்போதும் பக்கபலமாக இருக்கும். கடந்த காலங்களில் நியமனங்கள் இலங்கை முழுவதற்குமாக வழங்கப்பட்டன. ஆனால் இப்போது வடக்கு மாகாணத்துக்குள்ளேயே உங்களுக்கு வழங்கப்படுகின்றது.

எனவே, நீங்கள் வடக்கு மாகாணம் முழுவதிலும் எந்தவொரு இடத்திலும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் சேவையின் ஊடாக மக்கள் ஒரு சிறந்த மாற்றத்தை உணர வேண்டும், என்றார்.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களில் நிலவிய வெற்றிடங்களுக்காகத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி மன்னார் மதுபான சாலைகளில் போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனைக்குத் தடை
அடுத்த செய்தி பா.உ அருச்சுனா தாக்கியதாக கூறப்படும் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

பிப்ரவரி 16, 2026
இலங்கை

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

நவம்பர் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மின் தடங்கல் தொடர்பான முறைப்பாடுகளுக்கு டிஜிட்டல் வழிமுறைகள் அறிவிப்பு

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டம் – தமிழக மீனவர்கள் எச்சரிக்கை!

மார்ச் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?