அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து தங்களது வரலாற்றிலேயே மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், சீனா அதற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
17,000 வீரர்கள் மற்றும் நவீன ஏவுகணை அமைப்புகளுடன் நடைபெறும் இந்தப் பயிற்சி, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் “பாதுகாப்பு என்ற பெயரில் வெளிநாட்டு சக்திகளுடன் இணைவது நெருப்போடு விளையாடுவதற்கு சமம்” எனச் சீனா சாடியுள்ளது.
மத்திய கிழக்கு போருக்கு மத்தியிலும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களை அனுப்பி அமெரிக்கா தனது பலத்தைக் காட்டி வரும் நிலையில், ஜப்பானின் நேரடிப் பங்கேற்பு சீனாவிற்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயிற்சி பிராந்திய அமைதியைக் குலைப்பதாக பெய்ஜிங் குற்றம் சாட்டியுள்ளது.
