Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சாதனை படைத்த நான்கு சிறுவர்கள்

ஏப்ரல் 20, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தனுஷ்கோடி – தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியை சென்னையை சேர்ந்த நான்கு சிறுவர்கள் நீந்தி சாதனை.

தமிழகத்தையும், இலங்கையையும் பாக்கு நீரிணை பிரிக்கிறது. ராமேஸ்வரம் தீவு, அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணையை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கின்றன. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதி.

பாக்கு நீரிணை பகுதியை தனியாகவோ, குழுவாக மற்றும் மாரத்தான் முறையில் பலர் நீந்தி கடந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு அல்லது தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கு நீந்திக் கடந்தவர்கள்.

ஆனால், ஓர் இடத்திலிருந்து புறப்பட்டு மறுபுறத்தை அடைந்த பின், தொடர்ச்சியாக மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தொடங்கிய இடத்துக்கே இருபுறமாக நீந்தி வந்தவர்கள் ஒரு சிலர்.

சென்னையை சேர்ந்த சிறுவர்களான ஸ்ரீ அஷ்வத் (11), லவ் (09), குஷ் (09) மற்றும் தன்வேஷ் (10) ஆகிய நான்கு பேரும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் யாதவி விளையாட்டு அகாடமி மற்றும் இந்தியன் ஆட்டிசம் சென்டரில் நீச்சல் பயிற்சி பெற்று பல்வேறு நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இவர்கள் ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி வருவதற்கு இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடமும் அனுமதி கோரியிருந்தனர்.

அனுமதி கிடைத்த நிலையில் நேற்று (18) சனிக்கிழமை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் பிற்பகல் 03.25மணியளவில் நான்கு சிறுவர்களும் ரிலே முறையில் நீந்த தொடங்கி 17 கடல் மைல் தொலைவை 9 மணி 5 நிமிடங்கள் நீந்தி, இரவு 12.30 மணிக்கு தலைமன்னார் சென்றனர்.

உடனே, அங்கிருந்து தனுஷ்கோடி நோக்கி நீந்தத் தொடங்கி, இன்று காலை 9.27 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனை யை வந்தடைந்தனர்.

இந்த சாதனைக்காக சிறுவர்கள் நால்வரும், மொத்தம் 34 கடல் மைல் தொலைவை நீந்தி கடக்க 18 மணி 02 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர்.ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் நீந்த முடியும் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் அஷ்வத் , லவ் , குஷ் தன்வேஷ் ஆகிய நால்வருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முந்தைய செய்தி யாழில். கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாதீர்கள் – சீ.வீ.கே .சிவஞானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அக்கரைப்பற்றில் 34 கிராம் ஜஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

மார்ச் 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

டிசம்பர் 16, 2025
இலங்கை

கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் வீசப்படும் கழிவுகள்!

டிசம்பர் 16, 2025
இலங்கை

புன்னாலைக்கட்டுவன் கொலை சம்பவம் – ஒருவர் கைது!

நவம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?