Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து-மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலி.

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
மன்னார்  கடல் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மன்னார் வங்காலைப்பாடு  கடல் பகுதியில் இன்று (15) அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது..

வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின்  படகும் காட்டாஸ்பத்திரி  பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடிப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்  போது படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்தின் பின்னர் ஒரு மீனவர் கடலில் காணாமல் போயிருந்தார். சக மீனவர்கள் நீண்ட நேரம் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பலனாக  ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த விபத்தில் காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

சம்பவம் தொடர்பில் பொலிஸார், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பாக அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடல் தொழிலுக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்தத் துயர சம்பவம் மன்னார் மீனவ சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி உடுவிலில் தமிழரசு கட்சி அலுவலகம் திறப்பு
அடுத்த செய்தி யாழில். சிறுமி துப்பிரயோகம் – அயலவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அதிக வருமானத்தை ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

ஏப்ரல் 14, 2026
இலங்கை

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் நகர சபை தலைவருக்கும் இடையில் கைகலப்பு

ஜனவரி 30, 2026
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பேருந்தும், உந்துருளியும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரழப்பு!

ஜூன் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?