மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு முன்னெடுப்பு
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில், இன்று சனிக்கிழமை (11) மன்னார் மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (PSA) வரைவு தொடர்பாகவும் ஏற்கனவே அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம், அதனைத் தொடர்ந்து வந்த சட்டங்கள் மற்றும் தற்போது வரை பில் இருக்கின்ற PSA தொடர்பாகவும் தெளிவூட்டல் செயலமர்வு மாவட்ட செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த தொழிவூட்டல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து சுமார் 80 இற்கும் மேற்பட்ட இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டு இருந்தனர்.
மிகவும் உன்னிப்பாகவும், தற்போது மிகவும் பேசுபொருளாக இருக்கின்ற இந்த ‘அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம்’ (PSA) தொடர்பான தெளிவுபடுத்தல் இடம் பெற்றது.சட்டத்தரணி அல்வில் அமல்ராஜ் தெழிவூட்டல்களை வழங்கினார்.
அடுத்த கட்டமாக, நாங்கள் இந்த செயலமர்வை மேலும் மெருகூட்டும் விதமாக சிவில் சமூகங்கள், சிவில் அமைப்புகள் போன்ற பல்வேறு நபர்களுக்கும் முன்னெடுக்கவுள்ளனர்.
UNOPS நிறுவனத்தினுடைய விருத்தி திட்டத்தின் கீழ், நிதி அனுசரணையில் இந்த செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவன பணியாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
