Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தேசிய ரீதியில் சாதனைகளை நிலைநாட்டியுள்ள வடக்கு மாணவர்கள்

ஏப்ரல் 9, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டுகளை விட இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் மிகச் சிறந்த நிலையை எட்டியுள்ளன. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9,191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் அடிப்படையில் 65.19 சதவீதமாகும். இதன் மூலம் மாகாணங்களுக்கிடையிலான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் பெருமையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், உயிரியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் முதலிடத்தையும், பௌதீக விஞ்ஞானம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தையும் வடக்கு மாகாணம் இம்முறை பெற்றுக்கொண்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றவர்களின் வீதத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த வடக்கு மாகாணம், இம்முறை தனது அடைவுமட்டத்தை மேலும் உயர்த்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

அதேவேளை, பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக, இம்முறை மாகாண ரீதியாக 534 மாணவர்கள் சகல பாடங்களிலும் அதிவிசேட சித்தியான ‘ஏ’ (3ஏ) பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.

இது தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் 3.79 சதவீதமாகும். 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் வீதத்தின் அடிப்படையிலான தரவரிசையிலும் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து மேலும் ஒரு சாதனையைத் தனதாக்கியுள்ளது.

வடக்கு மாகாணத்தின் இத்தகைய கல்வி வளர்ச்சிக்கும் இணையற்ற சாதனைக்கும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைத்து மாணவர்களுக்கும், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும், மாகாண நிர்வாகக் கட்டமைப்புக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தமது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி யாழில். டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கி வைப்பு
அடுத்த செய்தி தடையை உடைப்போம் கியூபாவிற்கு தோள் கொடுப்போம் – வவுனியாவில் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை பார்வையிட்ட உத்தியோகத்தர்கள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனல் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

ஜூன் 26, 2026
இலங்கை

மட்டக்களப்பு போரதீவுபற்றில் நீரோடையில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

நவம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?