Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பொலிஸார் மீது நம்பிக்கையீனம் – பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோருகின்றனர்

ஜனவரி 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி இராமநாதபுரம், வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிசாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் போது கருத்து தெரிவித்த பிமல் ரட்நாயக்க, தான் இராமநாதபுரம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் சந்திப்புக்கு சென்ற சமயம் அப்பகுதி மக்கள் பொலிசாரின் விரும்பத்தகாத செயற்பாடுகளால், பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர்.

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால் , உடனேயே சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன என தெரிவிக்கின்றனர்.

தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், எதற்காக பொலிஸ் நிலையம், அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என மேலும் தெரிவித்தார்.

அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில், கீழ்நிலை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால், மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும். என தெரிவித்தார்.

அதன் போது ஜனாதிபதி, வல்வெட்டித்துறை பருத்தித்துறை பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அந்த தகவல் வழங்கியவர் தொடர்பில், சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கூறினார்.

முந்தைய செய்தி தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் .
அடுத்த செய்தி யாழில். சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த இராணுவ பங்களிப்புடன் வீதி தடைகள்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மறைத்து வைத்துள்ள அரிசிக் கையிருப்பு தொடர்பில் சோதனை நடவடிக்கை ….

மார்ச் 27, 2025
இலங்கை

கனியவள திணைக்களத்திடம் அறிக்கை பெற்ற பின்னரே சட்ட நடவடிக்கை – காளிங்க ஜயசிங்க

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக பலி!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மீனவர்களின் பிரச்சனை இதுவரையில் தீர்க்கப்படவில்லை.

பிப்ரவரி 19, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?