Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஜனாதிபதியிடம் 20 கோரிக்கைளை சமர்ப்பித்துள்ள கஜேந்திரகுமார்.

ஜனவரி 31, 2025
படிக்க 5 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 20 கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்.

1. யாழ் போதானா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல் வேண்டும்.

2. யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள நோயாளர் விடுதிகள் அதிகளவான நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது. பல விடுதிகளில் கட்டில்கள் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது நோயாளர்கள் நிலங்களில் படுக்கவேண்டிய நிலையும், இரவு முழுவதும் கதிரைகளில் அமர்ந்தவாறு உறங்கும் நிலையும், ஒரு கட்டிலில் இரண்டு நோயாளர்கள் படுக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. நோயாளிகளைப் பராமரிப்பதற்காக உடனிருப்பவர்கள் பல மணி நேரமாக நின்ற நிலையிலேயே பராமரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டிய நிலையிலுள்ளனர். இந்த நிலை உடனடியாகச் சீர் செய்யப்படல் வேண்டும்.

3. யாழ் பண்ணையில் அமைந்துள்ள மார்பாக சிகிச்சை (காச நோய்) பிரிவில் அடிப்படை வசிதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும். மயிலிட்டியில் அமைந்திருந்த காசநோய் பிரிவை அந்த இடத்தில் மீளவும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

மயிலிட்டியில் இயங்கிய காசநோய் வைத்தியசாலை தற்காலிகமாக கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இயங்குகின்றது. ஆனாலும் அங்கு அந்த அலகிற்கான ஆளணிகள் எதுவும் நியமிக்கப்படவில்லை. உடனடியாக ஆளணி நியமனம் செய்யப்படல் வேண்டும்.

பண்ணையில் உள்ள மார்பாக சிகிச்சை நிலையத்திற்கென நிரந்தரமான எக்ஸ்றே றேடியோ கிறாபர் (ஓ-சயல சயனழைபசயிhநச) இல்லை. நிரந்தரமாக நியமிக்கப்படல் வேண்டும். (தற்போது திங்கள் புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும்)

இவ்வைத்தியசாலையில் பரிசோதனைக்காக பெறப்படும் சளிமாதிரிகளை பாதுகாப்பாக களஞ்சிய்படுத்துவதற்கான குளிர்சாதனப் பெட்டிகள் பெரும் பற்றாக்குறையாக உள்ளது. பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் ஐந்து நாட்களுக்குள் சோதனை செய்யப்படல் வேண்டும். ஆனால் உரிய கருவிகள் இன்மையால் ஒரு வருடத்திற்கும் மேலாக சேமிப்பில் உள்ள நிலை காணப்படுகின்றது. இந்நிலை சீர் செய்யப்படல் வேண்டும்.

4. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவான இளையோர் போதைப் பொருள் பயன்பட்டிற்கு அடிமையாகியுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை புனவாழ்வளித்து மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைக்கப்படல் வேண்டும்.

5. யாழ் மாவட்டத்தில் கடற்தொழில்படகுகளை பாதுகாப்பதற்கான கல்லணைகள் அமைத்தல்:
பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம், இன்பர்சிட்டி கடற்கரை, சக்கோட்டை கடற்கரை, திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டமனாறு கடற்கரை, பலாலி கடற்கரை, சேந்தான்குளம் கடற்கரை, மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்துநிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும்.

படகுகள் நுழையும் பகுதிகளை ஆழமாக்குதல்:
மூர்க்கம் தொடக்கம் மாதகல் வரை படகுகள் தொழிலுக்காக இறக்கப்படும் நுழைவு வான்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால் படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும்.

கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்:
வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையிலேயே குவிக்கப்பட்டுள்ளது. அந்த மண் மீண்டும் மீண்டும் இறங்குதுறைக்குள் சென்று படகுகள் நிறுத்தும் பகுதியை மூடுவதனால் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.

6. இந்திய மீனவர்களால் வலைகள் படகுகள் சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும்.

7. கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு நஸ்ட ஈடு வழங்கப்படல் வேண்டும்.

8. யாழ் குடாநாட்டில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கவும் வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலுள்ளது, அத்தொகை அதிகரிக்கப்படல் வேண்டும்.

9. தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரை கட்டுமானம் அகற்றப்படல் வேண்டும். தனியார் காணிகள் அனைத்தும் பொது மக்களிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

10. மயிலிட்டியில் விடுவிக்கப்படாத மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் உட்பட யாழ் குடாநாட்டில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகள் மற்றும் பொதுக் காணிகள் அனைத்தும் விடுவிக்கபடல் வேண்டும்.
வசாவிளான் சந்தியிலிருந்து பலாலி சந்தி வரையான வீதி பொது மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படல் வேண்டும்.

11. யாழ் நகர அபிவிருத்திக்கு கடந்த 2017 ஆம் ஆண்டில் உலக வங்கி வழங்கிய நிதி உதவியில் வடிகாலமைப்பில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

12. யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் தகுதிபெற்ற திட்டமிடலாளற்குரிய ஆளணி உருவாக்கப்பட்டு, நியமனங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமைக்குமான பிரதான வடிகாலமைப்பு திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும்.

13. வீதி விளக்குகள் பொருத்துவது தொடர்பில் மின்சார சபைக்கும் – பிரதேச சபைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் உடனடியாகத் தீர்த்து வைக்கப்படல் வேண்டும்.

14. நெடுந்தீவுக்கான கடல்வழிப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் படகுச் சேவைகள் கடற்படையினரிடமிருந்து மீளப்பெற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படல் வேண்டும்.

15. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இயக்கப்பட்டுவந்த குறிகாட்டுவான் – நைனாதீவுக்கான போக்குவரத்துப் பாதை பழுதடைந்த நிலையில் ஒருவருடமாகத் திருத்தப்படாமல் உள்ளது. அதனை உடனடியாகத் திருத்தப்படல் வேண்டும்.
நைனாதீவு தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இறங்குதுறை பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக அங்கு போக்குவரத்து இடம்பெறுவதில்லை. அந்த இறங்குதுறை திருத்தி அமைக்கப்படல் வேண்டும்.

16. குறிகாட்டுவான் இறங்குதுறை உடனடியாக விஸ்தரிக்கப்படல் வேண்டும்.
குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து புங்குடுதீவு நோக்கிச் செல்லும் வீதி சுமார் 5 கிலோ மீற்றர் குன்றும் குழியுமாக உள்ளது. உடனடியாகத்திருத்தப்படல் வேண்டும்.

17. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தர மாகாண கல்விப் பணிப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

18. வடக்கு மாகாணாத்தில்அதிகாரிகளுக்கான பற்றாக்குறை 50 வீத்திற்கு மேல் காணப்படுகின்றது. இவ்வெற்றிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் பிரமாணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

19. வடக்கு மாகாணத்தில் 3555 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கபடல் வேண்டும்.

20. வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆளணி வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்படல் வேண்டும். ஆகிய கோரிக்கைகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

முந்தைய செய்தி மாவைக்கு ஜனாதிபதி அஞ்சலி.
அடுத்த செய்தி மக்களுக்கான ஜனாதிபதியால் எமக்காக ஐந்து நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லையா ?

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சமூக வலைத்தள கேஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமாந்த யாழ்.இளைஞன்

மார்ச் 7, 2026
இலங்கை

பெண் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

செப்டம்பர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வனாதே சம்பத் கைது

ஜனவரி 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது!

ஜூன் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?