Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியாவில் இருந்து வருகைதந்த துவிச்சக்கர வண்டி அணியினருக்கு யாழில். வரவேற்பு

ஏப்ரல் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ”Team Bison” அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride – Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது.

துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக மக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், உள்ளூர் துவிச்சக்கரவண்டிப் பயண அணியினரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி அணி ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

அவ்வணியினரை, நாடாளுமன்ற உறுப்பினர்களான ச.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் பலத்த வரவேற்பளித்தனர்

குறித்த குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கிய தமது துவிச்சக்கரவண்டிப் பயணத்தை ஆரம்பித்து, மதியம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நாளை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில். பொலிஸ் உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை – பிரதான சந்தேகநபர் கைது
அடுத்த செய்தி யாழில். விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் பொலிசாரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் விசேட சோதனை!

செப்டம்பர் 12, 2025
இலங்கை

ஊடகவியலாளர் குமணனிடம் நான்கரை மணித்தியாலங்களுக்கு மேலாக தொடரும் விசாரணை

ஆகஸ்ட் 17, 2025
இலங்கை

எத்தனை முறை காயப்படுத்தினாலும் மீண்டெழுவோம் -மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள்!

செப்டம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?