வவுனியா வடக்கு கனகராயன்குளததிலே வனவளத்திணைக்களத்தினால் மக்களின் காணிகளிலே எல்லையிடப்பட்ட இடங்களை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன்குளம் மற்றும் அதனை அண்மித்த மன்னகுளம், பெரியகுளம், பழையவிளாங்குளம் ஆகிய பகுதிகளிற்கே நேரில் சென்று ஆராய்ந்திருந்தார்.
இதன்போது கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளையின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் வவுனியா வடக்கு பிரதேச இணைப்பாளருமாகிய தவேந்திரராசா(அமலன்) ஆகியோரும் இணைந்திருந்தார்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் அரசாங்க அதிபர், வனவள திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
