இவ்வாண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
இதன்படி உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை விண்ணப்பதாரிகள் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic போன்ற இணையத்தளங்களில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
மேலும் பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்கலாம். தனியார் விண்ணப்பதாரர்கள் உங்களின் பயனர் மற்றும் கடவுச்சொல்லை அல்லது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிக்கல் காணப்படுமாயின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112785922 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.
