Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வன்னிவிளாங்குளம் பகுதியில் தொலைபேசியால் மாழும் மனிதம் இறுவட்டு வெளியீடு

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் தற்போது தொலைபேசியால் எத்தனையோ நன்மைகளும் தீமைகளும் மக்களுக்கு நடந்து வருகின்றது. இதில் இருந்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக தொலைபேசியால் ஏற்படும் பாதிப்புகள் இழப்புக்களை எடுத்துக்கூறும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் வன்னிவிளாங்குளம் பகுதியினை சேர்ந்த கவிஞர் ஆர்.கண்ணன் எழுதிய தொலைபேசியால் மாழும் மனிதம் என்ற பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 22.03.2026 அன்று வன்னிவிளாங்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

தாயக கலைஞர்களின் படைப்பான இந்த பாடலுக்கு பி.எஸ்.விமல் இசையமைத்துள்ளார் ஒலிசேர்கையினை எம்.பகி அவர்களும் பாடலினை என்.ரமணன் அவர்களும் பாடியுள்ளார்கள்.

இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு தலைமையில் தமிழ்தேசிய செயற்பாட்டாளர் கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக தமிழ்தேசிய இலக்கிய படைப்பாளி தீபச்செல்வன் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தின் செயற்பாட்டாளர் வீரமணி, போராளிகள் நலன்புரி சங்கத்தின் யாழ்மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,மல்லாவி வர்த்தக சங்கத்தலைவர் வினோத், மாங்குள பிரதேச தமிழ்தேசிய செயற்பாட்டாளர் சிந்துஜன், மாவீரரின் பெற்றோர் கந்தையா, துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் செந்தூரன், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் வரதன் ஓய்வு நிலை அதிபர் திரு.யோகானந்தம், கே.பி.கே. நிறுவனத்தின் உரிமையாளர் நேசன் ,போராளிகள் நலன்புரி சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர் குயிலன் உள்ளிட்ட தமிழ்தேசிய பற்றாளர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

குறித்த இறுவட்டின் முதல் பிரதிநியினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் வெளியீட்டு வைக்க கே.பி.கே. நிறுவனத்தின் தொழில் அதிபர் அதனை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து பிரமுகர்களுக்கு இறுவட்டுக்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், பாடியவர் இசைகோர்வை செய்தவர்கள் விருந்தினர்களினால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

முந்தைய செய்தி கனடாவில் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அறிவிப்பு
அடுத்த செய்தி மணல்காட்டில் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் – இருவர் வைத்தியசாலையில்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 21, 2025

ஜூன் 21, 2025
இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவின் ஆயுதங்களை கைப்பற்றிய CID அதிகாரிகள்!

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஆவா குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!

நவம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவிப்பு

ஏப்ரல் 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?