சட்டவிரோதமான முறையில் எரிபொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மூவர் நேற்றையதினம் (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி ஹங்வெல்ல எமுல்கம பகுதியில் பொலீசார் முன்னெடுத்த சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 645 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிட்குட்பட்ட போசிரிபுர பகுதியில் முன்னெடுத்த சோதனையில் 35 லீற்றர் 500 மில்லி லீற்றர் பெட்ரோலை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை புளுமெண்டல் பகுதியில் 2000 லீற்றர் டீசலை லொறி மூலமாக கடத்தி சென்ற நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
