Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மே 8, 2025
jaffna
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி மீதும், எம் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

‘பொதுத்தேர்தலென்பது வேறு, உள்ளுராட்சி சபைத் தேர்தலென்பது வேறு, எனவே, உள்ளுராட்சிசபைத் தேர்தல் முடிவுகளுடன்தான், உள்ளுராட்சிசபைத் தேர்தலை முடிவை ஒப்பிட வேண்டும்.

அந்த அடிப்படையில் பார்த்தால் 2018 தேர்தலில் வடக்கில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் இம்முறை வடக்கில் எல்லா பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்திக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம்மிக்க விடயமாகும்.

எனினும், மக்களை பிரித்தாள்வதற்கு முற்படும் அரசியல்வாதிகளுக்கு இது பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டதாக போலி பிரச்சாரம் முன்னெடுத்து இன்பம் காண்கின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதும், எம்மீதும், எமது அரசாங்கம் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால்தான் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். நிச்சயம் அதனை செய்வோம். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டு வருகின்றது.

எனவே, சதிகார அரசியல்வாதிகளால் எம்மையும், மக்களையும் பிரிக்க முடியாது. இலக்கை நோக்கிய எமது பயணம் தொடரும். உள்ளுராட்சிசபைத் தேர்தலில், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த அத்தனை சொந்தங்களுக்கும் நன்றிகள். அதேபோல வாக்களிக்காதவர்களுக்கும் எமது சேவைகள் தொடரும் என மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி நல்லூர் மற்றும் காரைநகரில் ஆட்சி அமைத்தால் சபைகளை சிறப்பாக நடத்துவோம் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்
அடுத்த செய்தி மாணவி அம்சி விடயத்தோடு தொடர்புபட்ட ஆசிரியருக்கு இடம்மாற்றம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வீடு புகுந்து தாக்கிய குழு மூவர் படுகாயம்!

ஜூலை 9, 2025
இலங்கை

பேராதனையிற்கும், கண்டிக்கும் இடையில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

ஆகஸ்ட் 30, 2025
இலங்கை

மருதானை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய பெண் கைது

செப்டம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களாக இருவருக்கு பதவி உயர்வு

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?