யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் உரையாற்றி இருந்தார்.
இதன்போது அவர் தெரிவித்ததாவது,
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்தது வருகின்றது. இந்த புதைகுழி விவகாரத்தை மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை.
கடந்த 2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் 239 மனித உடல்கள் மீட்கப்பட்டிருந்தன.
தற்போதைய அரசாங்கத்தில் 224 மனித உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மனித புதைகுழி தொடர்பில் யாரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முடியாது.
முறையாக இதனை கையாள வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
