மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வது தொடர்பில் இன்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் மேற்க் கொள்ளப்பட்டது.
இதன்போது 2025 ஆம் ஆண்டில் எட்டப்பட்ட பொருளாதார வெற்றிகளை நிலைபேறாக முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், தடையற்ற வலுசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது
மேலும் பொருளாதார சுருக்கத்தை குறைக்கும் வகையில் விலைகளை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் அதற்கான நிவாரணத் திட்டங்களைச் செயற்படுத்துவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
